அரசாங்கத்தின் மேலுமொரு மக்கள் நல திட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வசதியான வீடொன்றை வழங்கும் அரசாங்க கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வையின் கீழ் வெலிசர மில்கஹாவத்தையில் நிர்மாணிக்கப்படவுள்ள ‘வெலிசர ஹைட்ஸ் ரெசிடென்ஸ்’ வீடமைப்பு திட்டத்திற்கு இன்று (03/12) அடிக்கல் நாட்டப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தொலைநோக்கு கொள்கை திட்டத்தின் கீழ், இது வீட்டு வசதிக்கான மற்றுமொரு அபிவிருத்தித் திட்டம் என நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய இத்திட்டத்தின் கீழ் 408 வீடுகளை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த இந்த வீடமைப்பு திட்டத்திற்காக 5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சகல நிர்மாணப் பணிகளும் நிறைவடைந்து மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் மேலுமொரு மக்கள் நல திட்டம்

Social Share

Leave a Reply