சீனாவை வெளியேற்றிய இந்தியா, உள்ளே வர வேண்டும்

சீனா இலங்கையின் வடக்கு பகுதியிலுள்ள, தீவுகளில் மின் உற்பத்தி நிலையங்களை ஆரம்பிக்கும் திட்டங்களை முன்னெடுத்தது. ஆனால் இந்திய அரசின் ஆட்சேபனை காரணமாக அந்த திட்டங்கள் தற்போது கைவிடப்பட்டுள்ளன என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக இலங்கைக்கு மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை நிவர்த்தி செய்ய இந்தியா குறித்த திட்டத்தை செயற்படுத்த வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“வடக்கு தீவுகளில் மறு விளைவு இல்லாத சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க இருந்த சீனா, இந்தியாவின் பாதுகாப்பு ஆட்சேபனை காரணமாக அங்கிருந்து வாபஸ் பெற்று விட்டது.
ஆனால், “அதற்கு பதிலாக” அதே மின் உற்பத்தி கட்டமைப்பை மாலைத்தீவின் 12 ஆளில்லா தீவுகளில் முன்னேடுக்க அந்நாட்டு அரசுடன் சீனா உடன்பாடும் கண்டுள்ளது.
இந்நிலையில், அதேபோல் “அதற்கு பதிலாக” அதே நம்ம வடக்கு தீவுகளில் மின் நிலையங்களை அமைக்க இந்தியா உடனடியாக முன் வர வேண்டும்.
ஏனெனில் இந்த இந்தியா-இலங்கை-சீனா கயிறு இழுப்புகளுக்கு மத்தியில் நம் நாட்டுக்கு, சுத்தமான மின்சாரம் தேவை.” என மனோ MP தெரிவித்துள்ளார்.

சீனாவை வெளியேற்றிய இந்தியா, உள்ளே வர வேண்டும்

Social Share

Leave a Reply