பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனின் 2021ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 2 பாடசாலைகளுக்கு 200,000 ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைக்கான கணணி உபகரணங்கள் நேற்று (02/12) வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சத்தியசுதர்ஷன் மற்றும் கலாநிதி ராகவனின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இணைந்து விளையாட்டு உபகரணங்களை, விளையாட்டுக் கழக உறுப்பினர்களிடம் கலாநிதி சுரேன் ராகவன் சார்பில் குறித்த பாடசாலைகளின் அதிபர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.