இலங்கையின் தற்போதைய நிலுவை தொகை சார்ந்த நிதி பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய இந்தியாவும் இலங்கையும் நாணய பரிமாற்றத்திற்கு உடன்பட்டுள்ளன.
தற்போதைய நிலுவைத் தொகையை நிவர்த்தி செய்ய இலங்கைக்கு உதவ முன்வருவதாக, இந்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் மற்றும் நிதியமைச்சர் பஸில் ராஜபக்க்ஷ ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டது.
வெற்றிகரமான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பஸில் ராஜபக்க்ஷவின் பதவியேற்றதின் பின்னரான முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி. சுப்ரமணியம் ஜெய்சங்கர், இந்திய வெளிவிவகார அதிகாரிகள், பெற்றோலியத்துறை மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஸ்ரீ ஹர்தீப் சிங் பூரி ஆகியோரை நேரடியாக சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
