‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி இன்று (03/12) கிழக்கு நோக்கி பயணமாகவுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி கிழக்கு மாகாணம் திருகோணமலையை நோக்கி செல்கிறது.
அதற்கமைய இன்று முற்பகல் 10 மணியளவில் திருகோணமலையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக அறியமுடிகிறது.