சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் மற்றும் விற்பனையை நாடு முழுவதும் இடைநிறுத்தி வைத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நேற்று (02/12) முதல் விநியோகம் மற்றும் விற்பனை இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் மறு அறிவித்தல் வரை இது தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயுவின் தரம் தொடர்பான தெளிவான ஒரு உத்தரவாதத்தினை பெற்றுக் கொள்ளும் வரை விநியோகம் மற்றும் விற்பனை இடைநிறுத்தம் தொடரும் என லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.