மன்னாரில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

மன்னாரில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

மன்னாரில் 12 லட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார், தள்ளாடி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய மன்னார் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளின் உளவுப் பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள மூன்றாம் பிட்டி பகுதியில் நேற்று மாலை (24.09) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் விற்பனைக்காக பொதி செய்யப்பட்ட 03 கிலோ 570 கிராம் கேரள கஞ்சாவுடன் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply