
தனது அரசியல் வாழ்வு நிறைவுக்கு வருவதாக முன்னாள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பொதுச் சேவையை நிறைவு செய்யும் வேளையில் தமது முயற்சியை ஆதரித்து வழிகாட்டியவர்கள் மற்றும் ஆக்கப்பூர்வமாக விமர்சித்தவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
கடினமான காலகட்டத்தில் நீதி அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் என ஒவ்வொரு பதவியும் சவால்களுடன் கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகும் இந்த தருணத்தில் தனது முதல் ஆர்வமான சட்டத்துறையில் மீண்டும் ஈடுபடுவது குறித்து எதிர்பார்ப்புடன் உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.