தண்ணீர் போத்தல்களுக்கு கட்டுப்பாட்டு விலை

தண்ணீர் போத்தல்களுக்கு கட்டுப்பாட்டு விலை

சந்தையில் தற்போது 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் 500 மில்லி லீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றை 70 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என மத்திய மாகாண இயற்கை கனிய நீர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கண்டியில் இன்று (05.10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அந்த சங்கத்தின் அழைப்பாளர் சபுமல் குமார இதனைத் தெரிவித்தார்.

இதன்படி தண்ணீர் போத்தல்களுக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Social Share

Leave a Reply