நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவின் அரசியல் கட்சியான ‘ஐக்கிய ஜனநாயகக் குரல்’ கொழும்பில் இன்று(09.10) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டதுடன், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்படது.
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஆகியோரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியில் போட்டியிடவுள்ளனர்.
மேலும், ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தேசிய அமைப்பாளராக திலகரத்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.