இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் இருபது சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் பாணந்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 5 மடிக்கணினிகள், 437 கைத்தொலைபேசிகள், 332 USB கேபிள்கள், 17 ரவுட்டர்கள் உட்பட பல்வேறு இலத்திரனியல் உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கும் அண்மையில் இணையவழி நிதி மோசடியில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களுக்கும் இடையில் தொடர்புள்ளதா என்பதை உறுதிப்படுத்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
கடந்த 6ம் திகதி 30 சீன பிரஜைகள், 04 இந்தியப் பிரஜைகள் மற்றும் 06 தாய்லாந்து பிரஜைகள் உட்பட நாற்பது வெளிநாட்டுப் பிரஜைகள் ஹன்வெல்லவில் இரண்டு இடங்களில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மேலும், கடந்த 7ம் நாவலவில் 19 சீன பிரஜைகளும் இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர்.