இதுவரை வேட்புமனு தாக்கல் இடம்பெறாத 5 மாவட்டங்கள்

இதுவரை வேட்புமனு தாக்கல் இடம்பெறாத 5 மாவட்டங்கள்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக நேற்றைய தினம்(08.10) வரை சுயேட்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளடங்கலாக 33 குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.

அவற்றுள் 17 அரசியல் கட்சிகளும், 16 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் நேற்று(08.10) வரை அரசியல் கட்சியோ அல்லது சுயேட்சைக் குழுவோ வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்கவில்லை எனத் தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஒக்டோபர் 4ம் திகதி ஆரம்பமாகிய வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் நாளை(11.09) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.  

Social Share

Leave a Reply