இணையவழி மோசடிகளில் ஈடுபட்டுவந்த மேலும் 20 சீன பிரஜைகள் பாணந்துறையில்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய பாணந்துறை வடக்கு பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசா இன்றி 20 இலட்சம் ரூபாய் மாத வாடகை அடிப்படையில் அவர்கள் விடுதியில் தங்கியிருந்தமை விசாரணைகள் ஊடாக தெரிய வந்துள்ளது.
அவர்களிடமிருந்து 05 மடிக்கணினிகள், 437 கைபேசிகள், 332 USB கேபிள்கள் மற்றும் 17 ரவுட்டர்கள் உள்ளிட்ட பல உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவர்கள் 20 இலட்சம் ரூபாய் மாத வாடகை அடிப்படையில் பாணந்துறை பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நாவல பகுதியில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இணையவழி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
அதற்கு முன்னர் ஹங்வெல்ல பகுதியிலுள்ள விடுதி மற்றும் தனியார் நிறுவனமொன்றில் தங்கியிருந்த 30 சீன பிரஜைகளும், 4 இந்தியர்களும் 6 தாய்லாந்து பிரஜைகளும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.