முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை

முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட நான்கு நபர்களுக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று(10.10) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு கிரேக்கம் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருந்த போது, அந்நாட்டின் திறைசேரி பத்திரங்களைக் கொள்வனவு செய்ததினூடாக 184 கோடி ரூபாவுக்கும் அதிக இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட நான்கு நபர்களை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான பிணை அடிப்படையில் விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

குறித்த நபர்களுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கடவுச்சீட்டுகளை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply