கொழும்பு ஒருகொடவத்தையில் இரசாயன விஷம் கலந்த டின்மீன் தொகை சுங்க களஞ்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் பெறுமதி 215,000 அமெரிக்க டொலர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
நச்சுத்தன்மை வாய்ந்த டின் மீன்களை, சுற்றாடல், வனவிலங்கு, வன வளங்கள், நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்களின்
செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி நேற்று பார்வையிட்டார்.
இலங்கையில் டின்களில் அடைக்கப்பட்ட மீன்களின் இருப்பு அழிக்கப்பட மாட்டாது என தெரிவித்த பிரபாத் சந்திரகீர்த்தி,
இவற்றை மீள் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் சோதனைகளை இலங்கை சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.