உலக மனநல சுகாதார தினத்தை முன்னிட்டு பிரதமருக்கு சின்னம் வழங்கப்பட்டது

உலக மனநல சுகாதார தினத்தை முன்னிட்டு பிரதமருக்கு சின்னம் வழங்கப்பட்டது

உலக மனநல சுகாதார தினத்தை வண்ணத்துப்பூச்சி உருவம் பொறிக்கப்பட்ட சின்னமொன்று பிரதமருக்கு அணிவிக்கப்பட்டது.

இலங்கை மனநல சுகாதார சேவையாளர்களின் செயற்பாட்டு அமைப்பின் செயற்பாட்டு பணிப்பாளர் சுனில் கீர்த்தி நாணயக்காரவினால்
இந்த சின்னம் அணிவிக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை மனநல சுகாதார சேவையாளர்களின் செயற்பாட்டு அமைப்பானது, மனநல சுகாரத்திற்கென முன்னின்று செயற்படுவதுடன் மனிதர்கள் உளரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகும் போது அவற்றிற்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது தொடர்பிலான வழிகாட்டல்களையும் வழங்குகின்றது.

2013 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி உலக மனநல சுகாதார தினமாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மனநல சுகாதாரம் தொடர்பில் விழிப்புணர்வுகளை வழங்குதல் மற்றும் மனநல சுகாதார பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது இந்த தினத்தின் நோக்கமாகும்.

‘பணியிடத்தில் மனநலத்திற்கு முதலிடம் கொடுப்போம்’ என்பதே இம்முறை உலக மனநல சுகாதார தினத்தின் தொனிப்பொருளாகும்.

Social Share

Leave a Reply