100க்கு மேற்பட்ட சீன பிரஜைகள் இலங்கையில் கைது

100க்கு மேற்பட்ட சீன பிரஜைகள் இலங்கையில் கைது

பாரிய அளவிலான இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 120 சீன பிரஜைகள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி, குண்டசாலை பிரதேசத்திலுள்ள சொகுசு விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 15 கணனிகளும், 300க்கு மேற்பட்ட கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சொகுசு விடுதியிலுள்ள 47 அறைகளில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இணையவழி நிதி மோசடி அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

இந்த வாரத்தில் மாத்திரம் நிதி மோடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 200 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 6ம் திகதி ஹன்வெல்ல பிரதேசத்தின் இரு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 30 சீனர்கள், 4 இந்தியர்கள் மற்றும் 6 தாய்லாந்து பிரஜைகளும், கடந்த 7ம் திகதி நாவல பிரதேசத்தில் 19 சீன பிரஜைகளும், கடந்த 10ம் திகதி பாணந்துறையில் 20 சீன பிரஜைகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Social Share

Leave a Reply