எதிர்வரும் பொதுத்தேர்தல் வாக்காளர் பட்டியலை இறுவட்டாக(CD) வெளியிடத் தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினாலும் இந்த இறுவட்டினை பெற்றுக் கொள்ள முடியுமெனத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பொதுத்தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் செயலாளரினால், அதிகாரமிக்க பிரதிநிதியினால், சுயேட்சை குழுவின் தலைவரினால் அல்லது வேட்பாளரின் எழுத்து மூல கோரிக்கையின் அடிப்படையில் இறுவட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரநாட்களில் உரியக் கட்டணத்தைச் செலுத்தி பிரதான அலுவலகத்தில் அல்லது மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலை இறுவட்டாகப் பெற்றுக்கொள்ள முடியுமெனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.