தமிழர் விடுதலை கூட்டணியின் யாழ் மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று (14.10) நடைபெற்றது.
இந்த நிகழ்வு கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி ஆனந்த சங்கரி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது சட்டத்தரணி ஆனந்தசங்கரி, சமூக தொழில் முனைவாளர் கௌரி நித்தியானந்தம், அரச அலுவலர் சஞ்சயன், சமூக சேவையாளர்களான ஞா. ஜீவசங்கரி, முஹமத் இஸ்மாயில், ஆ.ஜெயக்குமார், செல்லையா சுந்தரமூர்த்தி, தொழிலதிபர் கோபிகாசன் லீனஸ் மற்றும் இராசையா சாள்ஸ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிமுகப்படுத்தப்பட்டனர்.
நிகழ்வில் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்
.