10 ஆவது நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் ரிஸ்விசாலி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான பெயரைப் பரிந்துரைக்குமாறு சபாநாயகர் அசோக ரன்வல சபைக்கு அறிவித்தார்.
மொஹமட் ரிஸ்வியின் தெரிவு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் காலாநிதி நளின் ஜயதிஸ்ஸவினால் முன்மொழியப்பட்டதுடன், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அதனை வழி மொழிந்தார்.