இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு இலக்குகளை தாண்டியது

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு இலக்குகளை தாண்டியது

சர்வதேச நாணய நிதியம் (IMF) நிர்ணயித்த இலக்குகளை தாண்டி இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு சுமார் 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஆளுநர்,

இலங்கை தனது வெளிநாட்டு கையிருப்பை வெற்றிகரமாக கட்டியெழுப்பியுள்ளது.

தற்போது பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதால் வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க முடியும்.

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் பாதிப்பு ஏற்படாத வகையில் வாகன இறக்குமதி மேற்கொள்ளப்படும்” என்றார்.

பொருத்தமான நிதிக் கொள்கைகள் வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply