இந்திய அணிக்கு புதிய தலைவர்

இந்திய ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளுக்கான அணி தலைவராக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இதனை அறிவித்துள்ளது.
இந்தியாவின் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளுக்கும் விராத் கோலி தலைவராக கடைமையாற்றி வந்தார். கடந்த 20-20 உலக கிண்ண தொடரோடு 20-20 அணி தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதாக விராத் கோலி அறிவித்திருந்தார்.


ஆனால் இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஒரு நாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணி தலைவர் பொறுப்பிலிருந்து அவரை நீக்கியுள்ளது. தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள தொடருக்கே ரோஹித் ஷர்மா அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


விராத் கோலி தொடர்ந்தும் டெஸ்ட் அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை ரோஹித் ஷர்மா டெஸ்ட் அணியின் உப தலைவராக நியமிக்கபப்ட்டுள்ளார்.
டெஸ்ட் தொடரின் பின்னரே ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் நடைபெறவுள்ளன. டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஒரு நாள் சர்வதேசப் போட்டிக்கான அணி பின்னர் அறிவிக்கபபடவுள்ளது.

டெஸ்ட் அணி விபரம்
விராத் கோலி, ரோஹித் ஷர்மா, லோகேஷ் ரஹுல், செட்டேஸ்வர் புஜாரா, அஜிங்கையா ரெஹானே, மயங்க் அகர்வால், ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமன் விஹாரி, ரிஷாப் பான்ட், ரிதிமன் சஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் ஷர்மா, மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, ஷர்த்தூல் தாகூர், மொஹமட் சிராஜ்.

இந்திய அணிக்கு புதிய தலைவர்

Social Share

Leave a Reply