பிலியந்தல பொலிஸ் நிலையத்தில் ஐஸ் போதை பொருளை உட்கொண்ட 37 வயதான ஒருவர் இறந்துள்ளார். இறந்த இரேஷ் உதயங்க உட்பட நால்வர் போதை பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்புகொண்டுள்ளார்கள் என்ற தகவல் பொலிஸாருக்கு கிடைத்ததனை தொடர்ந்து பொலிஸார் நால்வரையும் கைது செய்துள்ளனர்.
அதன் போது மரணமான குறித்த நபர் 500 கிராம் ஐஸ் போதை பொருளையும், 70,000/- பணத்தினையும், இலத்திரனியல் தராசையும் தன் வசம் வைத்திருந்துளார்.
பொலிஸிஸ் நிலையத்தில் வைத்து அவர் ஐஸ் போதைப்பொருளை உட்கொண்டு மயக்கமடைந்துளார். உடனடியாக பொலிஸார் அவரை கொழும்பு தெற்கு கலுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் இறந்துள்ளார்.
அவர் 5 கிராம் போதைப்பொருளை உட்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.