திருமலையில் அண்ணனையும் தம்பியையும் காணவில்லை

திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்ணனையும் தம்பியையும் காணவில்லை என தந்தையொருவர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக காணாமல் போன பிள்ளைகளின் பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தமது மாமியாருடன் வசித்து வந்த 15 மற்றும் 13 வயதுடைய அண்ணனும் தம்பியும் இன்று (08) மாலை வீட்டை விட்டு புறப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சிறுவர்கள் தொடர்பாக தகவல் தெரிந்தால் உடனடியாக 0262255031 எனும் இலக்கத்தினூடாக கோமரங்கடவல பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்துமாறு காணாமல் போன பிள்ளைகளின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை எம்.கே. பியுமந்த மெனுவன் (15வயது) மற்றும் எம்.கே.சிஹான் அப்பர் (13வயது) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
(திருகோணமலை நிருபர்)

திருமலையில் அண்ணனையும் தம்பியையும் காணவில்லை

Social Share

Leave a Reply