துஷார குரே தனது 100வது டெஸ்ட் போட்டிகளை பூர்த்தி செய்துள்ளார். இலங்கையில் ஓட்ட பதிவாளராக கமடையாற்றி வரும் குரேயின், இலங்கை, அவுஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட் அவரின் 100 ஆவது டெஸ்ட் ஆகும். இந்த மைல்கல் சாதனையை கெளரவிக்கும் முகமாக, ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஊடக பிரிவு மற்றும் இலங்கை ஊடகவியாளர்கள் அவருக்கான கெளரத்தை இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஊடக அறையில் வழங்கியிருந்தனர்.
குரே 1987 ஆம் ஏப்ரல் 16ஆம் திகதி, இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக ஓட்டப்பதிவாளராக தனது கடமையினை அவர் ஆரம்பித்தார். 38 வருடங்களில் இந்த 100 போட்டிகள் என்ற சாதனையை அவர் பூர்த்தி செய்துள்ளார். “திமுத் கருணாரட்ன 100 போட்டிகளுடன் ஓய்வு பெற்றுள்ள போதும் தான் ஓய்வு பெறப்போவதில்லை” குரே கூறுகிறார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் மற்றும் நிர்வாக சபையின் பரிசு ஒன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஊடக முகாமையாளர் பிரசன்ன ரொட்ரிகோ வழங்கி வைத்தார். ஒட்டப்பதிவாளர் சங்கம் சார்பாகவும், ஊடகவியாளர்கள் சார்பாகவும் கெளரவங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் அவுஸ்திரேலியா ஊடகவியாளர்களும் பங்குபற்றினர்.
துஷார குரேவின் இந்தத வரலாற்று சாதனையை முறியடிப்பது கடினமாகவே அமையும்.
![100 டெஸ்ட் போட்டிகளை பூர்த்தி செய்தார் துஷார குரே](https://vmedianews.com/wp-content/uploads/2025/02/cooray-1-1024x695.jpeg)
![100 டெஸ்ட் போட்டிகளை பூர்த்தி செய்தார் துஷார குரே](https://vmedianews.com/wp-content/uploads/2025/02/cooray-2-1024x768.jpeg)
![100 டெஸ்ட் போட்டிகளை பூர்த்தி செய்தார் துஷார குரே](https://vmedianews.com/wp-content/uploads/2025/02/cooray-3-1024x768.jpeg)
![100 டெஸ்ட் போட்டிகளை பூர்த்தி செய்தார் துஷார குரே](https://vmedianews.com/wp-content/uploads/2025/02/cooray-4-1024x768.jpeg)
![100 டெஸ்ட் போட்டிகளை பூர்த்தி செய்தார் துஷார குரே](https://vmedianews.com/wp-content/uploads/2025/02/cooray-5-1024x768.jpeg)
![100 டெஸ்ட் போட்டிகளை பூர்த்தி செய்தார் துஷார குரே](https://vmedianews.com/wp-content/uploads/2025/02/cooray-6-1024x768.jpeg)