இலங்கை,அவுஸ்திரேலியா ஒரு நாள் போட்டி நாணய சுழற்சி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடயிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டி இன்று(14.02) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகல் போட்டியாக ஆரம்பித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

இலங்கை அணி முதற் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை தனதாக்கும்.

அணி விபரம்

இலங்கை அணி சார்பாக அவிஷ்க பெர்னாண்டோ நீக்கப்பட்டு நிஷான் பீரிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நிஷான் மதுஷ்கவுக்கு இது முதலாவது போட்டி.

அவுஸ்திரேலியா அணி சார்பாக ஐந்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டிரவிஸ் ஹெட், அலெக்ஸ் ஹேரி, ஜோஷ் இக்லீஸ், கிளன் மக்ஸ்வெல், பென் ட்வரஷியஸ், ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி :- பத்தும் நிஸ்ஸங்க, நிஷான் பீரிஸ், குசல் மென்டிஸ், கமிண்டு மென்டிஸ், சரித் அசலங்க (தலைவர்), ஜனித் லியனகே, டுனித் வெல்லாலகே, வனிது ஹசரங்க, மஹீஸ் தீக்ஷண, எஷான் மலிங்க, அசித்த பெர்னாண்டோ

அவுஸ்திரேலியா அணி :- மட் ஷோர்ட், டிரவிஸ் ஹெட், ஜேக் பிரேசர் மக்கர்க், ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்) , அலெக்ஸ் ஹேரி, அலெக்ஸ் கேரி, ஜோஷ் இக்லீஸ், ஆரொன் ஹார்டி, சாம் அப்பொட், அடம் சம்பா, பென் ட்வரஷியஸ், டன்வீர் ஷங்ஹா

Social Share

Leave a Reply