மித்தெனிய கொலை சம்பவத்துடன் தொடர்புடை மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீரகெட்டிய வக்கமுல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹகுருவெல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.