முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை

நாடு எதிர்நோக்கும் வெளிநாட்டு கையிருப்பு விவகாரம் குறித்து நாளை (13/12) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய 2022ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

இதேவேளை, கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையம் தொடர்பான உடன்படிக்கை தொடர்பில் நாளைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை

Social Share

Leave a Reply