முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் நீராடுவதற்குத் தடை விதிக்கப்பட்டு சிவப்புக்கொடி நாட்டப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
கடந்த 6ஆம் திகதியன்று முல்லைத்தீவு கடலில் குளிக்கச் சென்ற வவுனியாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தமையின் காரணமாக நீராடுவதற்குத் தகுதியற்ற இடங்கள் கண்டறியப்பட்டு இவ்வாறு சிவப்புக்கொடி நாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆகையால் சிவப்புக்கொடி நாட்டப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் நீராட வேண்டாமென்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.