இலங்கைக்கு வருகைத்தரும் பயணிகள் தத்தமது ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் வகையில் விமான நிலையத்தில் வைத்து சுகாதார விண்ணப்பப் படிவத்தை நிரப்புவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், விமான நிலைய கருமபீடத்தில் இணையவழியூடாக தத்தமது சுகாதார விபரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் குறித்த படிவத்தினை ஒவ்வொரு பயணிகளும் தனித்தனியாக நிரப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.