எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, இன்றைய தினம் (12/12) முதல் வருட இறுதி வரை சதோச நிலையங்களில் சில வகை அரிசிகள் ரூபா 100 க்கு குறைசந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (11/12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
நாடு அரிசி ஒரு கிலோ 99 ரூபா 50 சதத்திற்கும், சிறந்த சம்பா ஒரு கிலோ 130 ரூபாவுக்கும், சீனி ஒரு கிலோ 125 ரூபாவுக்கும், பருப்பு ஒரு கிலோ 240 ரூபாவுக்கும் சர்க்காரம் உள்ளிட்ட 50 பொருட்கள் சந்தையில் இருக்கும் விலையை விட குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
