தமிழ் தொலைக்காட்சி உலகில் பிரபலமான தொகுப்பாளினியாக விளங்குபவர் வி.ஜே. பிரியங்கா தேஷ்பாண்டே.
சூப்பர் சிங்கர், பிக் பாஸ் தமிழ் சீசன் 5 உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தனது தனித்துவமான பாணியால் இரசிகர்களை கவர்ந்தவர், தற்போது அவரது இரண்டாவது
திருமணம் பேசுபொருளாக மாறியுள்ளது.
பிரியங்கா தேஷ்பாண்டே 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவியில் டெக்னீஷியனாக பணியாற்றிய பிரவீனுடனான இவரது காதல் திருமணம் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இருப்பினும், 2022 ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த விவாகரத்து குறித்து பிரியங்கா பொதுவெளியில் அதிகம் பேசாவிட்டாலும், சமூக வலைதளங்களில் அவரது கணவரைப் பற்றிய பதிவுகள் விவாகரத்து வதந்திகளை உறுதிப்படுத்தியது.
இந்நிலையில் அவர் தற்போது ஆண்டு இரண்டாவது திருமணத்தை நடத்தியுள்ளார்.
பிரியங்காவின் கணவர் , வசி சாச்சி யார் என்ற கேள்வி எல்லோரது மனதிலும் இருக்கும். அவர் இலங்கையர் என்பதுடன் பிரபலமான DJ ஆவார்.
சொந்தமாக ஈவென்ட் மெனேஜ்மன்ட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி பல திருமண நிகழ்ச்சிகளுக்கு அவர் DJவாக இருந்திருக்கிறார்.