தங்காலை – சீனிமோதர பகுதியில் வசித்து வந்த 54 வயதான அமெரிக்க பிரஜையொருவரின் சடலம் நேற்று (15/12) மீட்கப்பட்டுள்ளது.
சீனிமோதர பகுதியில் இவர் வசித்த வீட்டின் தோட்டத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், சடலத்தின் மீது தீக்காயங்கள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த அமெரிக்க பிரஜை, 2008ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் வசித்து வந்ததுடன் இலங்கை பிரஜாவுரிமையை பெற்றிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுனிக்குளத்தில் நீரில் மூழ்கி, இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (15/12) குறித்த இளைஞரும் அவரது தந்தையும் வவுனிக்குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த வேளை வள்ளம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது தந்தை நீந்தி கரையை வந்தடைந்த நிலையில், காணாமல் போன இளைஞரை பிரதேசவாசிகள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
