தெற்கு நெடுஞ்சாலை விபத்தில் இருவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாலடுவ – கப்புதுவ ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (22/12) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது .

கொள்கலன் லொறியொன்றும், தாங்கி லொறியொன்றும் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதியதிலே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாகவும், சம்பவத்தில் 72 மற்றும் 61 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தெற்கு நெடுஞ்சாலை விபத்தில் இருவர் பலி

Social Share

Leave a Reply