குறிஞ்சாக்கேணி விவகாரம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த நவம்பர் 23ஆம் திகதி இடம்பெற்ற மிதப்பு படகு கவிழ்ந்த போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேகநபர்களை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (27/12) குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் கிண்ணியா பொலிஸார் முன்னிலைப்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்வர்கள் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 35 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பகுதியில் மிதப்பு படகு விபத்து இடம்பெற்றபோது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பெயரில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

(திருகோணமலை நிருபர்)

குறிஞ்சாக்கேணி விவகாரம் - சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Social Share

Leave a Reply