தெரிவு செய்யப்பட்ட மூன்று நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகள் எதிர்வரும் 31ஆம் திகதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய அபுஜா, நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், பிராங்பேர்ட், ஜேர்மனியில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம், நிக்கோசியா, சைப்ரஸில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் ஆகியன எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் மூடப்படவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
துணை தூதரகங்களை நிர்வகிப்பதில் ஏற்பட்டுள்ள செலவினங்களை குறைப்பதற்காக ஜேர்மனி மற்றும் சைப்ரஸ் தூதரகங்கள் மூடப்படும் அதேவேளை, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நைஜீரியாவில் உள்ள உயர்ஸ்தானிகராலயம் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.