சுரக்கிமு கங்கா திட்ட முன்னுரிமை களனி கங்கைக்கு

சுரக்கிமு கங்கா வேலைத்திட்டத்தின் கீழ் களனி கங்கையை பாதுகாக்கும் நடவடிக்கைகளின் கீழ் ஆற்றை அசுத்தப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுரக்கிமு கங்கா செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட தேசிய செயற்பாட்டு குழு, மத்திய சுற்றாடல் அதிகார சபை கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (28/12) கூடிய போதே, அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், களனி கங்கையை சுற்றி, வெளியில் இருந்து வருவோரும் பொலித்தீன் பைகள் உள்ளிட்ட குப்பைகளை ஆற்றில் வீசுவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமல்லாது, இன்னமும் களனி ஆற்றில் உள்ள காணிகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், சட்டவிரோத வீடமைப்பு என்பவற்றை தடுக்க உடனடியாக ஆற்றங்கரையோரங்களில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், அறுகள் அசுத்தமாக்கப்படும் செயற்பாடுகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களமே இதற்கு பொறுப்பு எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சுரக்கிமு கங்கா வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி எப்போதும் விசாரித்து கேட்டறிவார் என்றும், அவர் மிகுந்த நம்பிக்கையுடன் இதில் வேலை செய்வதாகவும் தெரிவித்த அமைச்சர், அதனால் ஆறுகளை பாதுகாப்பது சுற்றுச்சூழல் அமைச்சினால் மட்டுமே செய்யக்கூடியவை அல்ல மாறாக, இதற்கு ஏனைய சகல அமைச்சுகளும் ஆதரவளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

சுரக்கிமு கங்கா திட்ட முன்னுரிமை களனி கங்கைக்கு

Social Share

Leave a Reply