பண்டாரகம – வெல்மில்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவரும் யுவதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (02/12) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் பண்டாரகம, வல்கம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனும் கண்டியைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனா்.
மோட்டார் சைக்கிள் அதிவேகமாக சென்றதன் காரணமாக வீதியில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.