இலங்கை பணியாளர்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் இந்த வருடம் பல புதிய ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் புதிய தொழில் வாய்ப்புகாக வாய்ப்புகள் கிடைக்கவுள்ளதாக பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு பதிவு பெறாமல் வெளிநாடு செல்வதால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான பொறுப்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.