சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நாளை (03/01) முதல் தற்காலிகமாக மீண்டும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அண்மையில் வெளியிட்டிருந்தாா்.

அந்நிய செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுத்து மசகு எண்ணெயை கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை மூடப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

எவ்வாறாயினும், தேவையான மசகு எண்ணெயை பெற்று ஜனவரி 30 ஆம் திகதிக்கு முன்னர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

Social Share

Leave a Reply