அதிபர் சேவைக்கான போட்டி பரீட்சையை நடத்தாமல் பாடசாலைகளுக்கான அதிபர்களைத் தெரிவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளை முழுமையாக எதிர்ப்பதாகவும் அதிபர் சேவையை அரசியல் மயப்படுத்துவதற்கான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.