இலங்கையின் மிக மோசமான பொருளாதர சூழ்நிலையில் இந்தியா இலங்கைக்கு கைகொடுக்க தயாராகிவிட்டது. மிக பெருமளவிலான பண உதவிகள் விரைவில் இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வருகை தரவுவுள்ளது.
இந்த பணம பெறுமதிகள் இலங்கைக்குள் வரும் நிலையில் நிலவும் டொலர் பிரச்சினை கூட முடிவுக்கு வரும் நிலை காணப்படுகிறது. முதற் கட்டமாக 900 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரவுள்ளன. அதனை தொடர்ந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் இரண்டாம் கட்டமாக வரவுள்ளன.
முதற்கட்டமாக இலங்கை வரும் பணத்தில் 400 மில்லியன் டொலர்கள் பரிமாற்று ஒப்பந்தமாகவும், 500 மில்லியன் டொலர்கள் எரிபொருள் கொள்வனுவுக்கான கடனாக பாவிக்கப்படவுள்ளது. இரண்டாம் கட்டமாக கிடைக்கும் ஒரு பில்லியன் டொலர்கள் அடிப்படை தேவைகளான உணவு, மருந்து பொருட்களை அடங்கலான அத்தியாவசிய தேவைகளுக்கு பாவிக்கப்படவுள்ளது.
