திருகோணமலை மாணவர்கள் நினைவு நாள்

திருகோணமலை கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் 16 ஆவது வருட நினைவு நாள் இன்று (02.12) திருகோணமலையில் அனுஷ்டிக்கப்பட்டது.

2006 ஆம் ஆண்டு ஜனவரி 02ஆம் திகதி திருகோணமலை நகராட்சி மன்றத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட குறித்த ஐந்து மாணவர்களின் நினைவு தினத்தை உயிரிழந்தவர்களின் உறவினர்களும், சக நண்பர்களும் இணைந்து அனுஷ்டித்தனர்.

ஐந்து மாணவர்களையும் சுட்டு படுகொலை செய்யப்பட்ட கடற்கரைக்கு முன்னாலுள்ள காந்திசிலை சுற்றுவட்டத்திற்கு முன்பாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

(திருகோணமலை நிருபர்)

Social Share

Leave a Reply