‘ஒமிக்ரொன் பாதிப்பின் தீவிரம் பூஸ்டர் தடுப்பூசியிலே தங்கியுள்ளது’

நாட்டில் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டதன் அளவை பொறுத்தே, ஒமிக்ரொன் தொற்று நாட்டுக்குள் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படுமென, அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையில் அதிகமான மக்கள் செலுத்திக் கொண்ட சினோபாம் தடுப்பூசியானது, அதன் செயல்திறன் 3 மாதங்களில் குறைந்து விடும் என்றும் ஏனைய தடுப்பூசிகளின் செயல்திறன் குறைய 6 மாதங்களாகும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், 3 மாதங்களின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்வது அவசியமாகும் எனத் தெரிவித்த அமைச்சர், பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொண்டதன் அளவை வைத்தே ஒமிக்ரோன் வைரஸ் இலங்கையில் எவ்வாறு பாதிக்கும் என்பது தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

'ஒமிக்ரொன் பாதிப்பின் தீவிரம்  பூஸ்டர் தடுப்பூசியிலே தங்கியுள்ளது'

Social Share

Leave a Reply