இம்மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் ஆபத்திருப்பதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எனினும் உடனடியாக தட்டுப்பாடு ஏற்படாது என்றும், எரிபொருளை இறக்குமதி செய்ய தேவையான டொலர்களை பெற்றுக்கொள்ள முடியாது போனால் மாத்திரமே இந்த நிலைமை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், இவ்விடயம் குறித்து அமைச்சரவைக்கு பல முறை தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏனைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய மாற்று வழிகள் இருந்த போதிலும் எரிபொருளை இறக்குமதி செய்ய அப்படியான மாற்று வழிமுறைகள் இல்லை என்றும் கூறினார்.
அத்துடன் எரிபொருள் விநியோகம் தடைப்படுமானால், சைக்கிளில் செல்லும் தூரம் வரை மாத்திரமே மக்களால் பயணிக்க நேரிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.