வெளிப்புற தலையீடுகளை இலங்கை அரசு நிராகரித்தது – ஐ.நா மனித உரிமை கூட்ட தொடர்

ஜெனிவாவில் நடைபெற்ற வரும் மனித உரிமை கூட்ட தொடரில் இன்றைய தினம் இலங்கை அரசாங்கம் சார்பில் வெளியுறவு துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் உரையாற்றினார். நேற்றைய தினம் ஆரம்பித்த இந்த கூட்ட தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பாற்ச்லெட் இலங்கை தொடர்பான விடயங்களை வெளியிட்டிருந்தார்.
இலங்கை அரசுக்கு நெருக்கடி தரும் சில விடயங்களை அவர் தெரிவித்ததோடு உறுப்பு நாடுகள் இலங்கையின் நடவடிக்கைகள் தொடர்பில் காண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் எந்தவிதமான வெளி ஆதிக்கத்திற்கும் இடமளிக்க முடியாது என தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான முயற்சிகளினால் எமது சமூகம் தனிமைப்படுத்தப்படுவததோ நாட்டின் ஒப்புதலின்றி செயற்படுவதனால் அந்த நாடு தனது குறிக்கோள்களை அடைய முடியாது எனவும், அது அரசியல்மயமாக்கப்பபடுமெனவும் தெரிவித்தார்.

ஒரு பொறுப்பான ஜனநாயக அரசாக எங்கள் சவால்களை ஒப்புக்கொள்வதில் நாங்கள் வெளிப்படையாக இருக்கிறோம். பொறுப்பு, நல்லிணக்கம், மனித உரிமைகள், அமைதி மற்றும் நிலையான வளர்ச்சி தொடர்பான முழு அளவிலான பிரச்சினைகளில் உறுதியான முன்னேற்றத்தை அடைய நாங்கள் செயற்பட்டு வருகிறோம்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் குற்றவாளிகள் மீது இலங்கை தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் மோசமான இந்த கொவிட காலத்திலும் மக்களுக்குரிய அடிப்படை தேவைகளை தடையின்றி செய்வதில் அரசாங்கம் முழு அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருவதாகவும் வெளியுறவு துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தனது உரையில் தெரிவித்தார்.

வெளிப்புற தலையீடுகளை இலங்கை அரசு நிராகரித்தது - ஐ.நா மனித உரிமை கூட்ட தொடர்

Social Share

Leave a Reply