கடுகன்னாவ வைத்தியசாலையின் மதில் இடிந்து வீழ்ந்ததில் வைத்தியசாலை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (06.12) காலை மண்மேடு வெட்டச் சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் கண்டி – அல்பிட்டிகந்த பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.