‘இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்யக்கூடாது’

இலங்கைக்கு உதவி செய்யும் இந்தியாவிற்கு இலங்கை அரசு ஒருபோதும் துரோகம் இழைத்துவிடக்கூடாதென இந்திய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவநர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் ஊடாகவே இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக் அரசுக்கான கடன் வசதிகளை இந்தியா அறிவித்துள்ளதை போன்றே, 13ஆவது திருத்தத்தையும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழங்க நிபந்தனைகளை விதிக்க வேண்டுமென குறித்த அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா 18 ஆயிரத்து 90 கோடி ரூபா கடன் வசதியை வழங்கியுள்ளது. சீனாவின் பக்கம் திரும்பிக் கொண்ட இலங்கை அரசை இந்தியா பக்கம் இழுப்பதற்கான இராஜதந்திர முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.

எதுஎவ்வாறாயினும், தொடர்கதையாக இடம்பெற்று வரும் இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைகளில், கச்சத்தீவு உள்ளிட்ட நிலப்பரப்பையும் பெற்றுக்கொண்டு, கோடிக்கணக்கான நிதியுதவியையும் பெற்றுக்கொண்டு பல்வேறு தருணங்களில் இந்தியாவுக்கு துரோகம் செய்த இலங்கை அரசு இம்முறையாவது ஆதரவாக இருக்குமா? என்பதற்கு உத்தரவாதமில்லை என அவ்வறிக்கையில் இந்திய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவநர் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version