அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை முழந்தாளில் இருத்தி, துப்பாக்கியினால் அச்சறுத்திய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளார். அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த 12 ஆம் திகதி குறித்த சம்பவம் நடவுபெற்றுள்ளது. இது குறித்த அறிந்த பிரதமர் உடனடியாக தனது அலுவலகத்திலிருந்து அவரை வெளியேறுமாறு பணித்ததாக அறியமுடிகிறது. 3 நாட்கள் தாண்டிய நிலையில் தமிழ் அரசையல்வாதிகள் குறித்த சம்பவத்திற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் லொஹான் ரத்வத்த தனது பதவியினை இராஜினாம செய்துள்ளார்.
லொஹான் ரத்வத்த முன்னாள் இராணுவ தளபதியும், பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் அனுரத்த ரத்வத்தையின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்கு தெரிவானவர் என்பதும் சுட்டிக் காட்டதக்கது.
