1800ஆவது நாளாக தொடரும் போராட்டம்

காணாமலாக்கப்பட்டவர்களது போராட்டம் வவுனியாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களது போராட்டம் இன்றைய தினம் 1800 ஆவது நாளை தொட்டுள்ள நிலையில் காணாமலாக்கப்பட்டவர்களது உறவுகள் அடையாள போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வவுனியா நகரத்தின், A9 வீதியில் வலிந்து காணமலாக்கப்பட்டவர்களது கொட்டகைக்கு முன்னத்தாக இந்தப் போராட்டம் இன்று நடைபெற்றுள்ளது. தங்களது உறவுகளை தேடி தாருங்கள், உரிய நீதி வழங்குங்கள் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் 1800 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைய தினம் போராட்டத்தில் சர்வதேச நீதி வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

வீடியோ இணைப்பு கீழுள்ளது

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version